திருவாரூரில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்


திருவாரூரில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 26 Feb 2019 4:15 AM IST (Updated: 26 Feb 2019 1:51 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை அமைச்சர் காமராஜ் திறந்து வைத்தார்.

திருவாரூர்,

திருவாரூர் பஸ் நிலையத்தில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கினார். கண்காட்சியை அமைச்சர் ஆர்.காமராஜ் திறந்து வைத்து பார்வையிட்டார். அப்போது அமைச்சர் கூறியதாவது:-

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனைகள் குறித்து புகைப்பட கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியின் மூலம் அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்து மக்கள் அறிந்து கொள்வதுடன், திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

குறிப்பாக விலையில்லா அரிசி வழங்கும் திட்டம், ஏழை பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், பள்ளி மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம், உழைக்கும் பெண்ளுக்கான ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் குறித்து புகைப்படங்கள் மக்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அரசின் திட்டங்களை அறிந்து பயன் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் உதவி கலெக்டர் முருகதாஸ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தனபால், தாசில்தார் குணசீலி, முன்னாள் எம்.எல்.ஏ. அசோகன், மாவட்ட ஊராட்சி முன்னாள் துணைத்தலைவர் வாசுகிராமன், கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர்கள் மூர்த்தி, மணிகண்டன், பன்னீர்செல்வம், கலியபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story