பொள்ளாச்சி சட்டசபை தொகுதியில் சிறப்பு முகாம், புதிய வாக்காளர் பெயர் சேர்க்கை, நீக்கலுக்கு 1860 பேர் விண்ணப்பம்


பொள்ளாச்சி சட்டசபை தொகுதியில் சிறப்பு முகாம், புதிய வாக்காளர் பெயர் சேர்க்கை, நீக்கலுக்கு 1860 பேர் விண்ணப்பம்
x
தினத்தந்தி 26 Feb 2019 4:15 AM IST (Updated: 26 Feb 2019 1:54 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி சட்டசபை தொகுதியில் நடை பெற்ற சிறப்பு முகாமில் புதிதாக வாக்காளர் சேர்க்கை, நீக்கல், முகவரி மற்றும் புகைப்படம் மாற்றத்திற்கு 1860 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

பொள்ளாச்சி,

1-1-2019 தேதியன்று 18 வயது பூர்த்தியானவர்களை தகுதி அடைந்தவர்களாக கொண்டு வாக்காளர் பட்டியலில் சேர்க்க சுருக்க முறை திருத்த பணி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி கடந்த 1-9-2018-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி முடிந்து இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 31-ந் தேதி கோவையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் பொள்ளாச்சி தொகுதிக்கான இறுதி வாக்காளர் பட்டியல் பொதுமக் கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

இந்த வாக்காளர் பட்டியலில் பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 1 லட்சத்து 4 ஆயிரத்து 722 பேரும், பெண்கள் 1 லட்சத்து 11 ஆயிரத்து 193 பேரும், 3-ம் பாலினத்தவர் 14 பேரும் சேர்த்து மொத்தம் 2 லட்சத்து 15 ஆயிரத்து 929 பேர் இடம் பெற்றுள்ளனர்.

பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 269 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் மட்டும் 88 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இந்த நிலையில் கடந்த 23, 24-ந் தேதிகளில் பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 269 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடை பெற்றது. இதில் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர 1170 பேரும், பெயர் நீக்கலுக்கு 290 பேரும், முகவரி மற்றும் புகைப்படம் மாற்றத்திற்கு 400 பேரும் சேர்த்து மொத்தம் 1860 பேர் விண்ணப் பித்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story