செல்போனில் பெண் குளிப்பதை படம் பிடித்த ஐ.ஐ.டி. மாணவர் பிடிபட்டார்
பக்கத்து வீட்டு பெண் குளிப்பதை செல்போனில் படம் பிடித்த ஐ.ஐ.டி. மாணவர் கைது செய்யப்பட்டார்.
தானே,
மராட்டிய மாநிலம் தானேயை சேர்ந்தவர் அவினாஷ் குமார் யாதவ் (வயது34). இவர் மும்பை ஐ.ஐ.டி.யில் படித்து வருகிறார். இந்த நிலையில், சம்பவத்தன்று அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் ஒருவர் குளியலறையில் குளித்து கொண்டு இருந்தார்.
அந்த பெண்ணை அவினாஷ் குமார் யாதவ் குளியலறை ஜன்னல் வழியாக தனது செல்போனில் படம் பிடித்து உள்ளார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அலறினார். சத்தம் கேட்டு ஓடி வந்த பெண்ணின் கணவர் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர்கள் அவினாஷ் குமார் யாதவை மடக்கி பிடித்தனர்.
தர்ம அடி கொடுத்து அவரது செல்போனை பறிமுதல் செய்தனர். அவரது செல்போனை பார்த்த போது, அந்த பெண் குளிக்கும் வீடியோ காட்சி இருந்தது. மேலும் அந்த கட்டிடத்தில் வசித்து வரும் மற்ற பெண்கள் மற்றும் ஆண்கள் குளிக்கும் காட்சிகளும் இருந்தன. அவினாஷ் குமார் யாதவ் அந்த கட்டிடத்தில் வசிப்பவர்கள் குளியலறையில் குளிப்பதை குறி வைத்து படம் பிடித்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரை காபுர்பாவடி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story