கோவில்பட்டியில் இளைஞர்களின் முயற்சியால் தூய்மையான தெப்பக்குளம்
கோவில்பட்டியில் இளைஞர்களின் முயற்சியால் தெப்பக்குளம் தூய்மையானது.
கோவில்பட்டி,
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் தெப்பக்குளத்தில் அகத்தியர் தீர்த்தம் உள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அகத்தியர் தீர்த்தத்தில் இருந்து கோடையிலும் தண்ணீர் வந்த வண்ணம் உள்ளது. இதனால் தெப்பக்குளத்தில் தண்ணீர் வேகமாக நிரம்பி வருகிறது.
இதற்கிடையே தெப்பக்குளத்தில் குப்பைகளாக காட்சி அளித்ததால், பக்தர்கள் வேதனை அடைந்தனர். இதையடுத்து இளைஞர்கள், பக்தர்கள், தொண்டு நிறுவனத்தினர், பொதுமக்கள் இணைந்து தெப்பக்குளத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இளைஞர்கள் தெப்பக்குளத்தில் இறங்கி குப்பைகளை அகற்றினர். இதனால் தற்போது தெப்பக்குளத்தில் தண்ணீர் தூய்மையாக காட்சி அளிக்கிறது. தொடர்ந்து வாரந்தோறும் விடுமுறை நாட்களில் தெப்பக்குளத்தில் தூய்மை பணியில் ஈடுபட உள்ளதாக இளைஞர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் கூறுகையில், பல ஆண்டுகளுக்கு பிறகு கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் தெப்பக்குளத்தில் உள்ள அகத்தியர் தீர்த்தத்தில் இருந்து, கோடையிலும் தண்ணீர் வந்த வண்ணம் உள்ளது.
இதனால் மழைக்காலத்தில்கூட நிரம்பாத தெப்பக்குளம் தற்போது வேகமாக நிரம்பி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இனி தெப்பக்குளத்தில் யாரும் குப்பைகளை கொட்டாமல், முறையாக பராமரிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
Related Tags :
Next Story