துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு மகள்களுடன் பெண் தர்ணா போராட்டம் - தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
நிலப்பிரச்சினை தொடர்பாக தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மகள்களுடன் பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
தேன்கனிக்கோட்டை,
தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு நிலப்பிரச்சினை தொடர்பாக தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மகள்களுடன் பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே மாசிநாயக்கனபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமப்பா. இவருடைய மனைவி குர்ரம்மா (வயது 70) இவர்களுக்கு சரஸ்வதி, அருணாஜோதி என்ற மகள்கள் உள்ளனர். குர்ரம்மாவுக்கும், மாசிநாயக்கனபள்ளி கிராமத்தை சேர்ந்த ஆனந்தப்பா, மஞ்சுளா தம்பதிக்கும் நிலப்பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த 24-ந்தேதி சரஸ்வதி, அருணாஜோதி ஆகிய 2 பேரும் தனது தாயாரை பார்க்க மாசிநாயக்கனபள்ளி கிராமத்திற்கு வந்தனர். அப்போது ஆனந்தப்பா, இவரது மனைவி மஞ்சுளா, ஆனந்தப்பாவின் மகன் முனிராஜ் மற்றும் உறவினர்கள் கோபாலப்பா, சந்திரம்மா ஆகியோர் சேர்ந்து குர்ரம்மாவை தடியாலும், கற்களாலும் தாக்கினர். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக குர்ரம்மா கெலமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஆனந்தப்பா உள்ளிட்டவர்கள் மீது புகார் அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை தெரிகிறது. இதனால் குர்ரம்மா தலையில் கட்டுடன், மகள்கள் சரஸ்வதி, அருணாஜோதி மற்றும் உறவினர்களுடன் தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு கையில் மனுவுடன் வந்தனர். அவர்கள் அங்கு திடீரென ஆனந்தப்பா உள்ளிட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை நடத்தினார். தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.
இதையடுத்து காயம் அடைந்த குர்ரம்மாவை தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு தாய்-மகள்கள் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story