மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 கோடி நலத்திட்ட உதவிகள் அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்


மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 கோடி நலத்திட்ட உதவிகள் அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்
x
தினத்தந்தி 27 Feb 2019 3:30 AM IST (Updated: 27 Feb 2019 2:59 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் மாற்றுத்திறனாளிகள் 439 பேருக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்.

நெல்லை,

நெல்லை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பாளையங்கோட்டை பார்வையற்றோர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார். நெல்லை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி., முத்துக்கருப்பன் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாந்தி குளோரி எமரால்டு வரவேற்றார்.

இதில் தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி கலந்து கொண்டு ரூ.1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கினார். ரூ.61½ லட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட 116 ஸ்கூட்டர்கள், 120 மோட்டார் பொருத்தப்பட்ட தையல் எந்திரங்கள், 10 மடக்கு சக்கர நாற்காலி, 30 பேருக்கு சிறப்பு சக்கர நாற்காலி, 8 உரு பெருக்கி, 13 மூன்று சக்கர சைக்கிள், 45 ஊன்று கோல், 20 ‘ரோல் லேட்டர்’ மற்றும் 77 பேருக்கு ரூ.30½ லட்சம் திருமண உதவித்தொகை என மொத்தம் ரூ.1 கோடியே 1 லட்சத்து 54 ஆயிரத்து 997 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

விழாவில் நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா, அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, கண்ணன் என்ற ராஜூ, மகபூப் ஜான், காபிரியேல் ராஜன், ரெட்டியார்பட்டி நாராயணன், பல்லிக்கோட்டை செல்லத்துரை, சேர்ம பாண்டி, முடநீக்கியல் வல்லுனர் பிரபாகரன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தினர் பலர் கலந்துகொண்டனர். 

Next Story