திருவள்ளூர் மாவட்டத்தில் நிதி உதவி வழங்கும் திட்டத்திற்கு 57 ஆயிரம் விவசாயிகள் தேர்வு கலெக்டர் தகவல்


திருவள்ளூர் மாவட்டத்தில் நிதி உதவி வழங்கும் திட்டத்திற்கு 57 ஆயிரம் விவசாயிகள் தேர்வு கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 27 Feb 2019 3:04 AM IST (Updated: 27 Feb 2019 3:04 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டத்தில் நிதி உதவி வழங்கும் திட்டத்திற்கு 57 ஆயிரம் விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்தார்.

திருவள்ளூர்,

பாரத பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாய குடும்பங்களுக்கு வருமானத்தை உயர்த்திட ஆண்டுக்கு ஒரு முறை ரூ.6 ஆயிரம் 3 தவணைகளில் வழங்கப்படும் என அரசு உத்தரவிட்டது. இதனை பிரதமர் நரேந்திரமோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் முதல் தவணையாக ரூ.2 ஆயிரத்தை வழங்கி தொடங்கிவைத்தார்.

அதைத்தொடர்ந்து திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழாவில் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், மாவட்டத்தில் 800 சிறு, குறு விவசாயிகளுக்கு பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் முதல் தவணையாக ரூ.2 ஆயிரத்தை பயனாளிகள் வங்கி கணக்கில் செலுத்தியதற்கான சான்றிதழ்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய கலெக்டர், ‘இதுவரை திருவள்ளூர் மாவட்டத்தில் 57,078 சிறு, குறு விவசாயிகள் இந்த திட்டத்தில் பயன்பெற தகுதியானவர்கள் என கண்டறிந்து அவர்களுக்கு முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் திருவள்ளூர் ஆர்.டி.ஓ. ரத்னா, வேளாண்மை இணை இயக்குனர் பாண்டியன், மாநில திட்ட துணை இயக்குனர் சுரேஷ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பிரதாப்ராவ் மற்றும் திரளான விவசாய துறையை சேர்ந்த அலுவலர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story