அரசு கல்லூரி கூடுதல் கட்டிடங்கள் திறப்பு
பொன்னேரி உலகநாத நாராயணசுவாமி அரசினர் கல்லூரியில் நடைபெற்றது. விழாவுக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கினார்.
பொன்னேரி,
மேலும் 379 பயனாளிகளுக்கு உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, இதர உதவித்தொகைகள், இலவச வீட்டு மனை பட்டாக்களையும் வழங்கினார். விழாவில் திருவள்ளூர் எம்.பி. வேணுகோபால், பொன்னேரி ஆர்.டி.ஓ. நந்தகுமார், தாசில்தார் புகழேந்தி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் வேதநாயகம் ஊரக வளர்ச்சி வங்கி தலைவர் பரிமேலழகன், கூட்டுறவு சங்கத்தலைவர் பானுபிரசாத், இயக்குனர் பொன்னுதுரை பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல் நிலைப்பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள், அரசு கல்லூரியில் கூடுதல் கட்டிடங்கள் திறப்பு விழா, 379 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 11 லட்சத்து 90 ஆயிரத்து 570-க்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பொன்னேரி உலகநாத நாராயணசுவாமி அரசினர் கல்லூரியில் நடைபெற்றது. விழாவுக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கினார்.
பொன்னேரி எம்.எல்.ஏ. சிறுணியம்பலராமன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் சீனிவாசன் வரவேற்றார். விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்று 2 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறையையும் மாணவர்களுக்கு வருகையை ஸ்மார்ட் கார்டு மூலம் பதிவு செய்யும் திட்டத்தையும், அரசு கல்லூரியில் கூடுதல் கட்டிடங்களையும் திறந்து வைத்தார்.
மேலும் 379 பயனாளிகளுக்கு உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, இதர உதவித்தொகைகள், இலவச வீட்டு மனை பட்டாக்களையும் வழங்கினார். விழாவில் திருவள்ளூர் எம்.பி. வேணுகோபால், பொன்னேரி ஆர்.டி.ஓ. நந்தகுமார், தாசில்தார் புகழேந்தி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் வேதநாயகம் ஊரக வளர்ச்சி வங்கி தலைவர் பரிமேலழகன், கூட்டுறவு சங்கத்தலைவர் பானுபிரசாத், இயக்குனர் பொன்னுதுரை பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story