போலி வாரிசு சான்றிதழ் மூலம் ரூ.1½ கோடி நிலம் அபகரிப்பு மத்திய அரசு ஊழியர் கைது


போலி வாரிசு சான்றிதழ் மூலம் ரூ.1½ கோடி நிலம் அபகரிப்பு மத்திய அரசு ஊழியர் கைது
x
தினத்தந்தி 27 Feb 2019 4:40 AM IST (Updated: 27 Feb 2019 4:40 AM IST)
t-max-icont-min-icon

கனடா நாட்டில் வாழ்பவர் மனோகரி. இவர் சென்னைக்கு வந்து போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

சென்னை,

கனடா நாட்டில் வாழ்பவர் மனோகரி. இவர் சென்னைக்கு வந்து போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

எனது தந்தை 1993-ம் ஆண்டு பூந்தமல்லி அருகே உள்ள மேல்பாக்கம் கிராமத்தில் ரூ.1½ கோடி மதிப்புள்ள நிலத்தை வாங்கினார். அந்த நிலத்தில் எனக்கும் பங்கு உண்டு. ஆனால் என் அண்ணன் சவுந்தரராஜன் (வயது 52) அந்த நிலத்திற்கு போலி வாரிசு சான்றிதழ் வாங்கி மேற்படி நிலத்தை விற்பனை செய்து விட்டார். அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த புகார் மனு தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் மல்லிகா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். புகார் கூறப்பட்ட சவுந்தரராஜன் நேற்று கைது செய்யப்பட்டார். சவுந்தரராஜன் மத்திய அரசு ஊழியர் ஆவார். இவர் ஆவடியில் உள்ள ராணுவ வீரர்களுக்கு உடை தயாரிக்கும் தொழிற்சாலையில் ஊழியராக வேலை செய்கிறார்.

Next Story