தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை கலெக்டர் ஆனந்த் வழங்கினார்


தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை கலெக்டர் ஆனந்த் வழங்கினார்
x
தினத்தந்தி 27 Feb 2019 3:45 AM IST (Updated: 27 Feb 2019 4:46 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்தை கலெக்டர் ஆனந்த் வழங்கினார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற உயர்நிலை, மேல் நிலைப்பள்ளி, கல்லூரி, பல் கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஆனந்த் கலந்துகொண்டு 10 மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு ஊக்கத்தொகையாக ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்தை வழங்கி பாராட்டினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக தமிழகத்தில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி, பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கான தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தது.

இதில் கேரம், கைப்பந்து, சதுரங்கம், கால்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பதக்கம் பெற்ற சந்தோஷ், ரஞ்சித்குமார், வர்ஷினி, ஜனினிஸ்ரீ, ஹரினி, காயத்திரி, சியாமளாதேவி, ஜெயஸ்ரீ, சுரேகா, மோனிஸ் ரோவினா, சுஜிதா, திவ்யா, யோகேஷ்வரன் ஆகிய மாணவ-மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இதில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் முருகுவேந்தன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story