கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது தப்பி ஓடியவர்களுக்கு வலைவீச்சு
கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய கல்லூரி மாணவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எழில்தாசன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஏந்தல் கிராமம் அருகே 5 பேர் கொண்ட கும்பல் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தனர். அவர்கள், போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடினர். இதனையடுத்து போலீசார் அவர்களை விரட்டி சென்றனர்.
இதில் 3 பேர் மட்டும் சிக்கினர். மற்ற 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். பின்னர் போலீசார் பிடிப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில், திருவண்ணாமலை அருகே உள்ள ஒரு தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்கும் கீழ்நாத்தூரை சேர்ந்த வினோத் (வயது21), நாவரது (21), தினேஷ் 22) என்பதும், கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டியதும் தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய கீழ்நாத்தூரை சேர்ந்த தீபன், சாரோன் பகுதியை சேர்ந்த ஸ்டீபன் ஆகிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story