சித்தோட்டில் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்


சித்தோட்டில் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Feb 2019 4:15 AM IST (Updated: 28 Feb 2019 12:57 AM IST)
t-max-icont-min-icon

பால் உற்பத்தியாளர்கள் சித்தோடு ஆவின் பால் கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

பவானி,

சித்தோடு ஆவின் பால் கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தில், நேற்று காலை பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜூ ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் ராமசாமி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

எருமை பால் லிட்டர் ஒன்றுக்கு 35 ரூபாயில் இருந்து 45 ரூபாயாகவும், பசும் பால் லிட்டர் ஒன்றுக்கு 28 ரூபாயில் இருந்து 35 ரூபாயாகவும் உயர்த்தி வழங்க கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள், சங்க பிரதிநிதிகள், பொறுப்பாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் என 100–க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார்கள்.


Next Story