சுத்திகரிக்காத கழிவுநீரை வெளியேற்றும் தொழிற்சாலை மீது கடும் நடவடிக்கை மாசுகட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் எச்சரிக்கை


சுத்திகரிக்காத கழிவுநீரை வெளியேற்றும் தொழிற்சாலை மீது கடும் நடவடிக்கை மாசுகட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 28 Feb 2019 4:15 AM IST (Updated: 28 Feb 2019 12:57 AM IST)
t-max-icont-min-icon

சுத்திகரிக்காத கழிவுநீரை வெளியேற்றும் தொழிற்சாலை மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாசுகட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் மலையாண்டி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

ஈரோடு,

தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரிய ஈரோடு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மலையாண்டி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:–

ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாயம், சலவை, பிரிண்டிங் மற்றும் தோல் உள்ளிட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் சாயம், சலவை, தோல் தொழிற்சாலைகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் மீண்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் வெளியேற்றப்படுவதை தடுக்கும் வகையில் ஈரோடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் பறக்கும் படை அதிகாரிகளால் தொடர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அதன்படி, கடந்த ஆண்டு மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலக எல்லைக்கு உள்பட்ட பகுதியில் 20 சாயப்பட்டறைகள், 37 சலவை மற்றும் பிரிண்டிங் பட்டறைகள், 2 தோல் தொழிற்சாலைகள் உள்பட மொத்தம் 61 தொழிற்சாலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

தற்போது, காவிரி ஆறு மற்றும் ஈரோடு மாநகரில் உள்ள கால்வாய்களில் நீர் வரத்து குறைந்து நிலத்தடி நீர் மட்டம் குறைய தொடங்கி உள்ளது. மேலும், பொதுமக்களிடம் இருந்து நிறைய புகார்கள் வர தொடங்கி உள்ளன. எனவே, சுத்திகரிக்காத கழிவுநீரை வெளியேற்றும் சாயம், சலவை மற்றும் தோல் தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் கூறிஉள்ளார்.


Next Story