புதுச்சேரி கலெக்டராக அருண் ஐ.ஏ.எஸ். நியமனம்


புதுச்சேரி கலெக்டராக அருண் ஐ.ஏ.எஸ். நியமனம்
x
தினத்தந்தி 28 Feb 2019 4:30 AM IST (Updated: 28 Feb 2019 1:54 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி மாவட்ட கலெக்டராக அருண் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். கவர்னர் கிரண்பெடி இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

புதுச்சேரி,

மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் சமீபத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான அருண், அசோக்குமார் ஆகியோரை புதுச்சேரிக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டது. அவர்களுக்கான துறைகள் ஒதுக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் புதுச்சேரி மாவட்ட கலெக்டராக அருண் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். அதைத்தொடர்ந்து புதுச்சேரி மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த அபிஜித் விஜய் சவுத்ரி இந்து அறநிலையத்துறை பொது நிர்வாகியாகவும், வக்பு வாரியம் மற்றும் சிறுபான்மை நலத்துறை, தீயணைப்புத்துறை செயலராகவும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

அசோக்குமார் ஐ.ஏ.எஸ். வருவாய் மற்றும் உள்ளாட்சித்துறை செயலராகவும், பிரசாந்த்குமார் பான்டா ஐ.ஏ.எஸ். செய்தி மற்றும் விளம்பரத்துறை செயலராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். நகரம் மற்றும் திட்ட வடிவமைப்புக்குழு செயலர் ஜவகருக்கு கூடுதலாக தொழிலாளர் நலத்துறை பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. புதுவை கவர்னர் கிரண்பெடி உத்தரவின்பேரில், அரசு தலைமை செயலர் அஸ்வனி குமார் இதற்கான ஆணையை பிறப்பித்துள்ளார்.

Next Story