இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க அரசு நடவடிக்கை அமைச்சர் கந்தசாமி தகவல்


இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க அரசு நடவடிக்கை அமைச்சர் கந்தசாமி தகவல்
x
தினத்தந்தி 28 Feb 2019 3:45 AM IST (Updated: 28 Feb 2019 1:55 AM IST)
t-max-icont-min-icon

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் கந்தசாமி தெரிவித்தார்.

பாகூர்,

கிருமாம்பாக்கம் அம்பேத்கர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12–ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி துணை முதல்வர் கவிதாசன் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் பாலமுரளி, அறங்காவல் குழு செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாணவ–மாணவிகளுக்கு தேர்வுக்கூட நுழைவு சீட்டுகளை வழங்கி அமைச்சர் கந்தசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

நீங்கள் எதிர்காலத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்த தேர்வு முக்கியமானதாகும். புதுச்சேரி தொழிலாளர் துறை, மத்திய அரசு மற்றும் சில வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்ற கூட்டம் அண்மையில் நடத்தப்பட்டது. அப்போது நர்சிங், என்ஜினீயர், டெக்னீசியன் போன்ற பல பிரிவுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு அதிக சம்பளத்தில் வேலை வாய்ப்புத்தர வெளிநாட்டு நிறுவனங்கள் முன்வந்துள்ளன. மாணவர்களுக்கு எதிர்காலத்தில் பல வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தர அரசு தயாராக உள்ளது.

பாண்லே நிறுவனத்தின் மூலம் ஐஸ்கிரீம் தயாரிப்பு தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். பிள்ளையார்குப்பத்தில் தொடங்கப்பட உள்ள பால்கோவா தயாரிப்பு மையம் மூலமும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.


Next Story