இறைச்சி கடைக்காரரை கொலை செய்த 3 பேருக்கு தலா 10 ஆண்டு ஜெயில் செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு


இறைச்சி கடைக்காரரை கொலை செய்த 3 பேருக்கு தலா 10 ஆண்டு ஜெயில் செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 28 Feb 2019 4:30 AM IST (Updated: 28 Feb 2019 4:36 AM IST)
t-max-icont-min-icon

இறைச்சி கடைக்காரரை கொன்ற 3 பேருக்கு தலா 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

மும்பை,

மும்பை எல்பின்ஸ்டன் ரோடு பகுதியை சேர்ந்தவர் தாகிர் சேக் (வயது37). இவர் அதே பகுதியில் இறைச்சி கடை நடத்தி வந்தார். கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி 26-ந் தேதி அப்பகுதியை சேர்ந்த குந்தன் சவுத்ரி (27), சஞ்சய் குமார் (23), தாமோதர் சாகு (22) ஆகியோர் அவரது கடைக்கு வந்தனர்.

இதில் குந்தன் சவுத்ரி ஏற்கனவே கடன் வைத்து இருந்ததால் தாகிர் சேக் அவருக்கு இறைச்சி கொடுக்க மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த குந்தன் சவுத்ரி அவரிடம் வாக்குவாதம் செய்தார். பின்னர் குந்தன் சவுத்ரி, சஞ்சய் குமார், தாமோதர் சாகு ஆகிய மூன்று பேரும் சேர்ந்து தாகிர் சேக்கை பிடித்து சரமாரியாக தாக்கினர். இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து என்.எம். ஜோஷி மார்க் போலீசார் வழக்குப்பதிவு செய்து குந்தன் சவுத்ரி உள்பட மூன்று பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணையின் போது 3 பேருக்கு எதிராக 11 பேர் சாட்சியம் அளித்தனர். விசாரணை நிறைவில் 3 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து குற்றவாளிகள் 3 பேருக்கும் தலா 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story