பரேல் பெஸ்ட் குடியிருப்பில் பயங்கரம் மகன், மகளை கொன்று தாய் தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது
பரேல் பெஸ்ட் குடியிருப்பில் மகன், மகளை விஷம் கொடுத்து கொன்று தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.அவர் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது.
மும்பை,
மும்பை பரேலில் உள்ள பெஸ்ட் ஊழியர்கள் குடியிருப்பில் வசித்து வருபவர் சந்தீப். பெஸ்ட் ஊழியர். இவரது மனைவி ரேவதி (வயது37). இவர்களுக்கு சுபம் என்ற 16 வயது மகனும், ரீசா(4) என்ற மகளும் இருந்தனர். நேற்று முன்தினம் காலை 8 மணியளவில் சந்தீப் வேலைக்கு சென்றார். இந்தநிலையில் சில மணி நேரங்கள் கழித்து சந்தீப் மனைவி ரேவதிக்கு போன் செய்தார். ஆனால் பலமுறை போன் செய்தும் ரேவதி போனை எடுக்கவில்லை.
இதனால் சந்தேகமடைந்த அவர் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு போன் செய்து வீட்டுக்கு சென்று பார்க்கு மாறு கூறினார். இதையடுத்து பக்கத்து வீட்டுக்காரர் கள் ரேவதியின் வீட்டுக்கு சென்றனர். ஆனால் வெகுநேரமாக கதவை தட்டியும் அவர் கதவை திறக்கவில்லை.
இதற்கிடையே சந்தீப்பும் வீட்டுக்கு விரைந்து வந்தார். அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது, அங்கு மனைவி ரேவதி தூக்கில் தொங்குவதை பாா்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் மகன் சுபம், மகள் ரீசா ஆகியோர் மயங்கிய நிலையில் படுக்கையில் கிடந்தனர். இதைப்பார்த்து சந்தீப் கதறி அழுதார். அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
விரைந்து வந்த போலீசார் 3 பேரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் 3 பேரும் உயிரிழந்துவிட்டதாக கூறினர்.
இந்தநிலையில் வீட்டில் சோதனை நடத்தியபோது, ரேவதி எழுதி வைத்திருந்த 3 கடிதங்களை போலீசார் கைப்பற்றினர். அந்த கடி தங்களை ரேவதி தனது அண்ணன், கணவர் மற்றும் போலீசாருக்கு என தனித்தனியாக எழுதி இருந்தார். அந்த கடிதத்தில் அவர், தீராத தலைவலியின் காரணமாக தற்கொலை செய்து கொள்கிறேன்.
நான் இறந்த பிறகு போதிய புத்தி சுவாதினம் இல்லாத 2 பிள்ளைகளும் கஷ்டப்படுவாா்கள் என்பதால் அவர்களையும் கொன்றுவிட்டேன் என உருக்கமாக கூறப்பட் டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், ரேவதி 2 பிள்ளைகளையும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. எனினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் பிள்ளைகள் 2 பேரும் விஷம் கொடுத்துதான் கொல்லப்பட்டார்களா என்பது உறுதி செய்யப்படும் என போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
மகன், மகளை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரேல் பெஸ்ட் குடியிருப்பு பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story