அரப்பாக்கத்தில் கன்டெய்னர் லாரி மீது மினிவேன் மோதி 2 பேர் பலி
வேலூர் அருகே அரப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் கன்டெய்னர் லாரி மீது மினிவேன் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியாகினர்.
ஆற்காடு,
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வேலூர்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கன்டெய் னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அதன் பின்னால் ஆற்காடு நோக்கி காய்கறி களை ஏற்றிக் கொண்டு மினிவேன் சென்றது. தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் விபத்துகளை தடுக்க வாகனங்களின் வேகத் தை குறைக்க டிவைடர்கள் வைக்கப்பட்டுள்ளன.
அரப்பாக்கம் அருகே கன்டெய்னர் லாரி சென்ற போது டிவைடர்கள் சாலை யின் குறுக்கே இருந்ததால் டிரைவர் அதன் வேகத்தை குறைத்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த மினிவேனின் டிரைவர் இதனை கவனிக்கவில்லை.
இதனால் கன்டெய்னர் லாரி மீது மினிவேன் மோதியது. மோதிய வேகத்தில் மினி வேனின் முன்பகுதி நொறுங்கியது. மினி வேனுக்குள் டிரைவரும், உடன் இருந்த மற்றொரு நபரும் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மினிவேனில் இருந்த தக்காளிகள் சாலையில் சிதறியது. இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த ரத்தினகிரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மினிவேனில் சிக்கி இருந்த 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இருவாக னங்களையும் அப்புறப்படுத்தி சுமார் 1 மணி நேரத்துக்கு பின்னர் போக்கு வரத்தை சீர் செய்தனர்.
போலீசாரின் விசாரணை யில், ஆற்காட்டை சேர்ந்த டிரைவர் பாஸ்கர் (வயது 34) மற்றும் கோபிநாத் (53) என்பது தெரியவந்தது. மேலும், இந்த விபத்து குறித்து ரத்தினகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story