சென்னையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க சிக்கராயபுரம் கல்குவாரியில் இருந்து தண்ணீர் எடுக்கும் பணி தொடங்கியது
சென்னையின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க மாங்காட்டை அடுத்த சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரியில் இருந்து தினமும் 30 மில்லியன் லிட்டர் குடிநீர் எடுக்கும் பணி தொடங்கியது.
சென்னை,
பருவமழை பொய்த்ததால் சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளின் நீர்மட்டம் அதலபாதாளத்துக்கு சென்றது.
இதையடுத்து குடிநீர் தேவையை சமாளிக்க லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் நடந்து வருகிறது. இந்தநிலையில் குடிநீர் பிரச்சினை பெரிய அளவில் தலைதூக்காமல் இருக்க குடிநீர் வாரியம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-
சென்னையில் உள்ள 6 லட்சத்து 73 ஆயிரத்து 339 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளன. இதுதவிர 24 ஆயிரத்து 712 தெரு குழாய்கள் உள்ளன. இவற்றுக்கு தினமும் 830 மில்லியன் கன அடி தண்ணீர் தேவைப் படுகிறது. ஆனால் தற்போது ஏரிகளில் நீர் மட்டம் குறைவாக இருப்பதால் 550 மில்லியன் லிட்டர் வீதம் வினியோகம் செய்யப்படுகிறது.
இதற்கு தேவையான தண்ணீர் வீராணம் ஏரியில் இருந்து 180 மில்லியன் லிட்டரும், மீஞ்சூர், நெம்மேலியில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்களில் இருந்து தலா 100 மில்லியன் லிட்டர் வீதம் 200 மில்லியன் லிட்டரும் எடுக்கப்படுகிறது. அத்துடன் போரூர் அருகில் உள்ள சிக்கராயபுரம் கல்குவாரியில் இருந்து 30 மில்லியன் லிட்டர் உள்பட 410 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது.
சிக்கராயபுரத்தில் உள்ள 8 மற்றும் 19 எண் கொண்ட கல்குவாரிகளில் கடந்த ஆண்டை விட தற்போது கூடுதலாக தண்ணீர் இருக்கிறது. குறிப்பாக 200 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. இதில் 150 மில்லியன் கன அடி தண்ணீரை நாள் ஒன்றுக்கு 30 மில்லியன் லிட்டர் வீதம் 150 நாட்களுக்கு மிதவை எந்திரம் மூலம் எடுக்க திட்டமிட்டு உள்ளோம். இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Related Tags :
Next Story