தேர்வு அறையில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் முதன்மை கல்வி அலுவலர் எச்சரிக்கை


தேர்வு அறையில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் முதன்மை கல்வி அலுவலர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 1 March 2019 4:00 AM IST (Updated: 28 Feb 2019 10:40 PM IST)
t-max-icont-min-icon

தேர்வு அறையில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதன்மை கல்வி அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருவண்ணாமலை,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 19-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை நடக்கிறது. இந்த தேர்வில் திருவண்ணாமலை வருவாய் மாவட்டத்தில் 13 ஆயிரத்து 441 மாணவர்களும், 14 ஆயிரத்து 587 மாணவிகளும் என 28 ஆயிரத்து 28 பேர் தேர்வு எழுகின்றனர்.

தேர்வு பணிகளில் முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், நிலைப்படையினர், பறக்கும் படையினர், அறைக்கண்காணிப்பாளர்கள், அலுவலக பணியாளர்கள் என 2 ஆயிரத்து 193 பேர் ஈடுபடுகின்றனர்.

தேர்வு மைய வளாகத்துக்குள் செல்போன் எடுத்து வரக்கூடாது. தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களும் தேர்வறையில் செல்போன் வைத்திருக்கக்கூடாது. இதனை மீறி தேர்வர்களோ அல்லது ஆசிரியர்களோ செல்போன் உள்பட இதர தகவல் தொடர்பு சாதனங்களை வைத்திருப்பது தெரியவந்தால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

துண்டுத்தாள் வைத்திருத்தல், துண்டுத்தாள்களை பார்த்து எழுத முயற்சித்தல், பிற மாணவர்களை பார்த்து எழுதுதல், தேர்வு அதிகாரியிடம் முறைகேடாக நடந்துகொள்ளுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல் மற்றும் ஆள்மாறாட்டம் செய்தல் ஆகிய ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் தேர்வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

தேர்வு அறைக்குள் மாணவர்கள் பெல்ட், காலணி அணிந்து வரக்கூடாது. தேர்வு நாளன்று காலை 9.45 மணிக்கு முதல் மணி அடிக்கும் போது மாணவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவர்.

இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார்.

Next Story