ஓசூரில் 934 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அசோக்குமார் எம்.பி., கலெக்டர் பிரபாகர் வழங்கினர்


ஓசூரில் 934 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அசோக்குமார் எம்.பி., கலெக்டர் பிரபாகர் வழங்கினர்
x
தினத்தந்தி 28 Feb 2019 11:00 PM GMT (Updated: 28 Feb 2019 5:56 PM GMT)

ஓசூரில் 934 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அசோக்குமார் எம்.பி., கலெக்டர் பிரபாகர் ஆகியோர் வழங்கினர்.

ஓசூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை மற்றும் அஞ்செட்டி ஆகிய தாலுக்காக்களை சேர்ந்த 934 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா, விபத்து நிவாரண தொகை பெறுவதற்கான ஆணைகள், சமூக உதவி திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகள், வீட்டு மனைப்பட்டா, வேளாண் கருவிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி ஓசூரில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, பர்கூர் எம்.எல்.ஏ. சி.வி.ராஜேந்திரன், ஓசூர் உதவி கலெக்டர் விமல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அசோக்குமார் எம்.பி., மாவட்ட கலெக்டர் பிரபாகர் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இதில், ஓசூர் தாசில்தார் பாலசுந்தரம், துணை தாசில்தார் ரமேஷ் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில், தேன்கனிக்கோட்டை தாசில்தார் பி.வெங்கடேசன் நன்றி கூறினார். முன்னதாக, ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில், ரூ. 10.50 கோடி மதிப்பில் குழந்தைகள் மற்றும் மகப்பேறு நலப்பிரிவுக்கான புதிய கட்டிட கட்டுமான பணியை கலெக்டர் பிரபாகர் மற்றும் அசோக்குமார் எம்.பி. தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு வங்கி தலைவர்கள் எம்.நடராஜன், ஹரீஷ் ரெட்டி, ஜெயராம், ஓசூர் அக்ரோ தலைவர் ஹரி பிரசாத், வசந்த்நகர் கூட்டுறவு சங்க துணைத்தலைவர் சங்கர் என்ற குபேரன், முன்னாள் ஓசூர் நகர்மன்ற உறுப்பினர்் அசோகா, மாவட்ட அ.தி.மு.க. பொருளாளர் கே.நாராயணன், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர் அரப்ஜான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story