பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்விற்கான முன்னேற்பாடு பணிகளை அதிகாரி ஆய்வு
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று தொடங்கும் பிளஸ்-2 அரசு பொது தேர்விற்கான முன்னேற்பாடு பணிகளை கண்காணிப்பு அதிகாரி ஆய்வு செய்தார்.
பெரம்பலூர்,
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 19-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இன்று தமிழ் தேர்வினை எழுதுவதற்கு மாணவ- மாணவிகள் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வினை 71 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளை சேர்ந்த 8 ஆயிரத்து 533 மாணவ- மாணவிகள் 33 தேர்வு மையங்களில் எழுதவுள்ளனர். தேர்வுக்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட பள்ளிக் கல்வித்துறையினர் செய்து வருகின்றனர்.
பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வினை எழுதும் மாணவ- மாணவிகளுக்கு அனுமதி சீட்டுகளை (ஹால் டிக்கெட்) அந்தந்த பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இணையதளத்தில் பதவிறக்கம் செய்து வழங்கினர். மேலும் தேர்வு மையங் களுக்கு வினாத்தாள் கொண்டு செல்வதற்கு பெரம்பலூர் மாவட்டத்தில் 9 வழித்தட அலுவலர்களும், 43 முதன்மை கண்காணிப்பாளர்களும், 43 துறை அலுவலர்களும், மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க 60 பறக்கும் படை உறுப்பினர்களும், 465 அறை கண்காணிப்பாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று பெரம்பலூர், அரியலூர், திருச்சி ஆகிய மாவட்டங் களுக்கு அரசு பொதுத்தேர்வுகள் கண்காணிப்பு அதிகாரியான, பள்ளி கல்வித்துறையை சேர்ந்த துணை இயக்குனர் வீரக்குமார் தலைமையிலான ஆலோசனை கூட்டம் நேற்று பெரம்பலூர் பாரத சாரணர் இயக்க மைய கட்டிடத்தில் நடந்தது. பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அருளரங்கன் முன்னிலை வகித்தார். இதில் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வுகளை கண்காணிக்கும் முதன்மை கண்காணிப் பாளர்கள், துறை அலு வலர்கள், பறக்கும் படை உறுப்பினர்கள், வழித்தட அலுவலர்கள் கலந்து கொண்டனர். அப்போது கண்காணிப்பு அதிகாரி வீரக்குமார் கூறுகையில், பிளஸ்-2 அரசு பொது தேர்வினை முன்னிட்டு மாணவ- மாணவிகளுக்கு அரசு தேர்வு துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதனை தேர்வு நடைபெறும் மையங்களில் நடைமுறைப்படுத்த வேண்டும். மாணவ-மாணவிகள் ஹால் டிக்கெட் இல்லாமல் தேர்வு எழுத அனுமதிக்க கூடாது. செல்போன் உள்ளிட்ட தொலை தொடர்பு மின்னணு சாதனங்களும், காப்பி அடிப்பதற்கு துண்டு சீட்டினை எடுத்து வரு கிறார்களா? என்பதை சோதனையிட்ட பிறகே உள்ளே அனுமதிக்க வேண்டும் என்றார்.
பின்னர் அவர் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் செய்துள்ள முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பெரம்பலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத் தினையும், அங்கு வைக்கப்பட்டுள்ள வினாத்தாள், விடைத்தாள்கள் இருக்கும் அறைகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அந்தந்த தேர்வு மையங்களில் மேஜைகளில் ஆசிரிய-ஆசிரியைகள் தேர்வு எழுதும் மாணவ- மாணவிகளின் ஹால் டிக்கெட்டின் பதிவெண்ணை எழுதினர்.
Related Tags :
Next Story