தொண்டாமுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு


தொண்டாமுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 28 Feb 2019 10:30 PM GMT (Updated: 28 Feb 2019 8:24 PM GMT)

தொண்டாமுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை,

கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் கே.ராஜாமணி திடீரென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், மருந்துகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் அவர் கல்வீரம்பாளையம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்தார். அப்போது அவர் ஆஸ்பத்திரியில் இருந்த டாக்டர்களிடம் சிகிச்சை அளிக்க தேவைப்படும் கருவிகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் கலெக்டர் கே.ராஜாமணி நிருபர்களிடம் கூறிய தாவது:-

இந்தியாவில் மருத்துவ சுற்றுலா அதிகம் நடைபெறும் மாவட்டங்களில் கோவையும் ஒன்று. கோவை அரசு ஆஸ்பத்திரியில் கோவை மட்டுமின்றி பிற மாவட்டங்கள், பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஊரக பகுதிகளில் வசிக்கும் மக்கள், பெருமளவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களையே நாடி செல்கின்றனர். எனவேதான், குறிப்பிட்ட தூரங்களில் முன் எப்போதும் இல்லாதவாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே தொடங்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் தற்போது அரசு ஆஸ்பத்திரிகளாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.

மேலும், சிறப்பு சிகிச்சைகள் அளிக்கக்கூடிய வகையில் அதிநவீன சிகிச்சை கருவிகள் வழங்கப்பட்டு நவீனப்படுத்தப்பட்டும் வருகிறது. எனவே இங்கு வரும் நோயாளிகளிடம் டாக்டர்கள், நர்சுகள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மேலும் தேவையான கருவிகள், அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட மருத்துவ பணி இணை இயக்குனர் மூலம் தெரியப்படுத்தலாம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story