லாரி-மோட்டார்சைக்கிள் மோதல், அரசு போக்குவரத்து கழக டிரைவர் பலி
லாரி-மோட்டார்சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் அரசு போக்குவரத்து கழக டிரைவர் இறந்தார்.
புஞ்சை புளியம்பட்டி,
புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள வேமாண்டம்பாளையம் ஓணான்குட்டையை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 35). அரசு போக்குவரத்து கழகத்தில் கோவை பணிமனைக்கு சொந்தமான அரசு விரைவு பஸ்சில் டிரைவர்-கண்டக்டராக வேலை பார்த்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று காலை வேலை முடிந்த பின்னர் மூர்த்தி மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு சென்றுகொண்டு இருந்தார். காவிலிபாளையம் ரோட்டில் தபோவனம் அருகே அவர் சென்றபோது எதிரே தண்ணீர் லாரி ஒன்று வந்தது கண்இமைக்கும் நேரத்தில் மோட்டார்சைக்கிளும், லாரியும் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் தூக்கிவீசப்பட்ட மூர்த்தி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.
விபத்து நடந்ததும் லாரி டிரைவர் இறங்கி தப்பி ஓடிவிட்டார். இதுபற்றி தகவல் கிடைத்ததும், புஞ்சைபுளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார்கள். மேலும் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
விபத்தில் இறந்த மூர்த்திக்கு தனலட்சுமி என்ற மனைவியும், சாதனா (14), சுபாஷனி (8), சுபஸ்ரீ (3) என்ற 3 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
Related Tags :
Next Story