பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது திருப்பூர் மாவட்டத்தில் 25,723 பேர் எழுதுகிறார்கள்


பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது திருப்பூர் மாவட்டத்தில் 25,723 பேர் எழுதுகிறார்கள்
x
தினத்தந்தி 1 March 2019 5:23 AM IST (Updated: 1 March 2019 5:23 AM IST)
t-max-icont-min-icon

பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இந்த தேர்வை திருப்பூர் மாவட்டத்தில் 25 ஆயிரத்து 723 பேர் எழுதுகிறார்கள்.

திருப்பூர், 

தமிழக அரசின் தேர்வுத்துறையால் நடத்தப்படும் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இந்த தேர்வை திருப்பூர் மாவட்டத்தில் 203 மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் 11 ஆயிரத்து529 மாணவர்களும், 13 ஆயிரத்து 823 மாணவிகளும், தனித்தேர்வர்களாக 371 பேரும் என்று மொத்தம் 25ஆயிரத்து 723 பேர் எழுதுகிறார்கள். இவர்கள் தேர்வு எழுத 78 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்வு மையங்களில் ஒரு அறையில் 20 மாணவர்கள் அமர்ந்து தேர்வு எழுதும் வகையில் இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டு இதில் மாணவர்களின் வரிசை எண்கள் எழுதப்பட்டன. தேர்வு மையத்தின் வெளியில் உள்ள அறிவிப்பு பலகையில் அறை எண் மற்றும் மாணவர்களின் வரிசை எண்கள் ஒட்டி வைக்கப்பட்டன. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாந்தி பல்வேறு தேர்வு மையங்களில் ஆய்வு செய்து மாணவர்கள் தேர்வு எழுத போதுமான வெளிச்சம் உள்ளதா? குடிநீர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா? தேர்வு நேரத்தில் மின்சாரம் தடைபட்டால் உபயோகிக்க ஜெனரேட்டர் வசதி செய்யப்பட்டுள்ளதா? போன்றவற்றை பார்த்தும், கேட்டும் ஆலோசனை வழங்கினார்.

முதல் தேர்வாக தமிழ் பாடத்துக்காக தேர்வு நடக்கிறது. தேர்வுகள் வருகிற 19-ந்தேதி வரை நடக்கிறது. தேர்வுகள் 6 பாடங்களுக்கும் தலா 100 மதிப்பெண் வீதம் 600 மதிப்பெண்களுக்கு நடக்கிறது. அதே சமயம் கடந்த ஆண்டு தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதவர்கள் தாங்கள் தோல்வி அடைந்த மொழி பாடங்களுக்கு 100 மதிப்பெண்களுக்கும், மற்ற பாடங்களுக்கு 200 மதிப்பெண்களுக் கும் தேர்வு எழுதுவார்கள்.

இவர்களுக்கு திருப்பூர் செஞ்சரி பவுண்டேசன் மெட்ரிக் பள்ளி, தாராபுரம் சி.எஸ்.ஐ. பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 2 இடங்களில் தனியாக தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. பிளஸ்-2 தேர்வை மாணவ-மாணவிகள் அனைவரும் எந்த வித பயமும் இல்லாமல் எழுதி அனைவரும் தேர்ச்சி பெற வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Next Story