சென்னை மாநகராட்சி பள்ளியில் கல்வி சீர் வழங்கும் விழா பெற்றோர், நன்கொடையாளர்கள் கல்வி உபகரணங்களை வழங்கினர்


சென்னை மாநகராட்சி பள்ளியில் கல்வி சீர் வழங்கும் விழா பெற்றோர், நன்கொடையாளர்கள் கல்வி உபகரணங்களை வழங்கினர்
x
தினத்தந்தி 2 March 2019 4:00 AM IST (Updated: 1 March 2019 10:18 PM IST)
t-max-icont-min-icon

சென்னை மாநகராட்சி பள்ளியில் நடைபெற்ற கல்வி சீர் வழங்கும் விழாவில் பெற்றோர், நன்கொடையாளர்கள் பள்ளி மற்றும் மாணவர்களுக்கு தேவையான கல்வி உபகரணங்களை வழங்கினர்.

சென்னை,

சென்னை மாநகராட்சி மற்றும் அரசு பள்ளிகளுக்கு அரசு தரப்பில் இருந்து அனைத்து விதமான வசதிகள், கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் சில நன்கொடையாளர்கள் மூலமும் அவை நிவர்த்தி செய்யப்படுகின்றன.

அவ்வாறாக கல்வி உபகரணங்களை வழங்கும் நன்கொடையாளர்களை கவுரவிக்கும் விதமாகவும், பள்ளிகளுக்கு தேவையான உபகரணங்களை கேட்டு பெறுவதற்காகவும் கல்வி சீர் வழங்கும் விழாவை நடத்த பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த கல்வி திட்டம் அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.

அதன்படி, சென்னை சேத்துப்பட்டு மெக்னிக்கல் சாலையில் உள்ள சென்னை தொடக்கப்பள்ளியில் கல்வி சீர் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவுக்கு பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கூடுதல் கல்வி அலுவலர் பாரதிதாசன், உதவி கல்வி அலுவலர் வசந்தி, பள்ளி தலைமை ஆசிரியர் சித்ரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, கல்யாணத்துக்கு சீர் வரிசை கொண்டு வருவது போல, கொடையாளர்கள், பெற்றோர் சீர்வரிசை தட்டில் பள்ளி மற்றும் மாணவர்களுக்கு தேவையான கல்வி உபகரணங்களை மேள தாளத்துடன் எடுத்து வந்தனர். அதில் நாற்காலி, வாட்டர் பாட்டில், ஜாமிண்டிரி பாக்ஸ், பென்சில், பேனா, பை என ஏராளமான பொருட்களை கொண்டு வந்து மாணவர்களுக்கு வழங்கினர்.

இதுகுறித்து ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், ‘பள்ளிக்கு தேவையான பொருட்களை அரசு வழங்கினாலும், சில பொருட்களை கொடையாளர்கள் மற்றும் பெற்றோர் மாணவர்களுக்கு எந்த குறைபாடும் இருக்கக்கூடாது என்ற எண்ணத்தில் வழங்குகிறார்கள். அவர்களை கவுரவப்படுத்தும் விதமாக வித்தி யாசமான முறையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது’ என்றனர்.

Next Story