சென்னை அரசு மருத்துவமனையில் மனநோயாளி வயிற்றில் இருந்து சாவி, காசு உள்பட 40 பொருட்கள் அகற்றம்


சென்னை அரசு மருத்துவமனையில் மனநோயாளி வயிற்றில் இருந்து சாவி, காசு உள்பட 40 பொருட்கள் அகற்றம்
x
தினத்தந்தி 2 March 2019 4:45 AM IST (Updated: 1 March 2019 10:47 PM IST)
t-max-icont-min-icon

சென்னை அரசு மருத்துவமனையில் மனநோயாளி வயிற்றில் இருந்து சாவி, காசு உள்பட 40 பொருட்கள் டாக்டர்கள் ‘எண்டோஸ்கோபி’ சிகிச்சை மூலம் அவரது இரைப்பையில் இருந்த பொருட்களை அகற்ற முடிவு செய்தனர்.

சென்னை,

சென்னை அயனாவரம் மனநல காப்பகத்தில் நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தவர் ஜெயகுமார்(வயது 52). அங்கு அவருக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுப்பதில் பிரச்சினை இருந்தது. இதையடுத்து அங்கிருந்த டாக்டர்கள் சி.டி.ஸ்கேன் செய்து பார்த்தபோது, ஜெயகுமாரின் வயிற்றில் சாவி, காசுகள் உள்ளிட்ட பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு ஜெயகுமாரை பரிசோதித்த டாக்டர்கள், அவரது இரைப்பையில் அந்த பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து டாக்டர்கள் ‘எண்டோஸ்கோபி’ சிகிச்சை மூலம் அவரது இரைப்பையில் இருந்த பொருட்களை அகற்ற முடிவு செய்தனர்.

இதை தொடர்ந்து அவருக்கு 2 நாட்கள் ‘எண்டோஸ்கோபி’சிகிச்சை செய்யப்பட்டது. இதன் மூலம் ஜெயகுமாரின் வயிற்றில் இருந்து சாவி, காசுகள் உள்ளிட்ட 40 பொருட்கள் வெளியே எடுக்கப்பட்டன. பின்னர் தொடர் சிகிச்சைக்கு பின்னர் அவர் நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

Next Story