காஞ்சீபுரம் மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா


காஞ்சீபுரம் மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா
x
தினத்தந்தி 2 March 2019 4:15 AM IST (Updated: 2 March 2019 12:20 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

செங்கல்பட்டு,

காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. ஆப்பூர் ஊராட்சியில் தி.மு.க. கொடியேற்றி மாவட்ட விவசாய அமைப்பாளர் சந்தானம் இனிப்பு வழங்கினார். சிங்கப்பெருமாள் கோவில் பஜார் வீதியில் நடந்த விழவில் ஊராட்சி தி.மு.க. செயலாளர் கே.பி.ராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட மகளிர் அணி நிர்வாகி கலைவாணி, ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் கே.ஆர்.ஜெ.ரத்தீஷ், சரத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கதிரவன் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினர்களாக காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தா.மோ.அன்பரசன், ஒன்றிய செயலாளர் தண்டபாணி, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஆப்பூர் சந்தானம், ஒரகடம் சிலம்பு செல்வம் ஆகியோர் கேக் வெட்டி ஏழை, எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள். பாரேரி கிளை செயலாளர் மதனகோபால், திருத்தேரி சண்முகம் ஆகியோர் தி.மு.க. கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்கள். பரனூர் அரசு தொழுநோயாளிகள் இல்லத்தில் நடந்த விழாவில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மோகனா ஜீவானந்தம் தலைமையில் நடந்த விழாவில் பிரியாணி, வேட்டி சேலை வழங்கப்பட்டன. மறைமலை நகரில் தொழில் அதிபர் சந்துரு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வடக்கு ஒன்றிய அமைப்பாளர் பாலா என்கிற பால்ராஜ் தலைமையில் சுங்குவார்சத்திரம், சோகண்டி உள்ளிட்ட கிராமங்களில் வடக்கு ஒன்றிய செயலாளர் கருணாநிதி தி.மு.க. கொடியேற்றி இனிப்பு, அன்னதானம், மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் போன்றவற்றை வழங்கினார். இதில் மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் பொடவூர் ரவி, இளைஞர் அணி துணை அமைப்பாளர் சத்தியா, ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் போஸ்கோ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் நகர தலைவர் சத்தீஷ் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் தெற்கு ஒன்றிய செயலாளர் கோபால் காந்தி சாலையில் உள்ள அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து கட்சி கொடியேற்றி அன்னதானம் வழங்கினார். இதில் மாவட்ட அமைப்பாளர்கள் முருகன், செந்தில்தேவராஜ், அவைத்தலைவர்கள் மோகன், ரவிச்சந்திரன், ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சியிலும் கட்சி கொடியேற்றி இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினர்.

Next Story