ஆண்டிப்பட்டியில், 9-ம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம்


ஆண்டிப்பட்டியில், 9-ம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம்
x
தினத்தந்தி 2 March 2019 4:15 AM IST (Updated: 2 March 2019 12:46 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டியில் 9-ம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய் தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-

ஆண்டிப்பட்டி,

ஆண்டிப்பட்டியில் உள்ள ஒரு பள்ளியில் 15 வயது சிறுமி 9-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 27-ந்தேதி பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்ப வில்லை. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் ஆண் டிப்பட்டி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத் தினர்.

இதைத்தொடர்ந்து வைகை அணை அருகே உள்ள முதலக் கம்பட்டியில் மோட்டார் சைக்கிளில் வாலிபருடன் சென்ற மாணவியை போலீசார் மீட்டனர். மேலும் அந்த வாலிபரிடம் போலீசார் விசா ரணை மேற்கொண்டனர். இதில் அவர் ஆண்டிப்பட்டி 12-வது வார்டு மேலத்தெருவை சேர்ந்த அன்பழகன் மகன் ஆனந்தகுமார்(வயது 23) என்பதும், தனியார் பால் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும், மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த ஆனந்தகுமாரை போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

Next Story