குள்ளஞ்சாவடி அருகே, பஸ் மோதி பிளஸ்-1 மாணவர் பலி
குள்ளஞ்சாவடி அருகே பஸ் மோதி பிளஸ்-1 மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
குறிஞ்சிப்பாடி,
குள்ளஞ்சாவடி அருகே உள்ள பெரியகாட்டு சாகை வடக்கு தெருவை சேர்ந்தவர் ரங்கசாமி, டிரைவர். இவரது மனைவி பூமலர். இவர்களுடைய மகன் ஜீவா (வயது 17). இவர் வன்னியர்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று காலை ஜீவா மோட்டார் சைக்கிளில் பள்ளிக் கூடத்துக்கு சென்றார்.
பின்னர் மதியம் உணவு இடைவேளையின் போது அவர் வீட்டுக்கு சென்று சாப்பிட்டு விட்டு, மீண்டும் மோட்டார் சைக்கிளில் பள்ளிக் கூடத்துக்கு புறப்பட்டார்.
கடலூர்-விருத்தாசலம் சாலையில் சென்ற போது, கடலூரில் இருந்து விருத்தாசலம் நோக்கி வந்த அரசு பஸ் ஒன்று ஜீவா ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த குள்ளஞ்சாவடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான ஜீவாவின் உடலை பார்வையிட்டு, அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பூமலர் குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story