மணல் குவாரி அமைக்க வலியுறுத்தி மாட்டுவண்டி தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
மணல் குவாரி அமைக்க வலியுறுத்தி மாட்டு வண்டி தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூரில் மாட்டு வண்டி மணல் குவாரி அமைக்கக்கோரி ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாட்டு வண்டி தொழிலாளர் மாவட்ட செயலாளர் மதியழகன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மணிவேல் தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் மாட்டு வண்டி மணல் குமாரி அமைக்க வேண்டும். போலீஸ் நிலையங்களில் பிடித்து வைத்துள்ள மாட்டு வண்டிகளை விடுவிக்க வேண்டும். மாட்டு வண்டி உரிமையாளர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும்.
மாவட்டம் முழுவதும் மாட்டுவண்டி தொழிலாளர்கள் கணக்கெடுப்பு செய்து அடையாள அட்டை வழங்க வேண்டும். பாரம்பரிய தொழிலான மாட்டு வண்டி தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாத்திட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் மகாராஜன், கடலூர் மாட்டுவண்டி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் திருமுருகன், அகில விவசாய தொழிற்சங்க மாநில துணை தலைவர் ஸ்டாலின், ஜெயங்கொண்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், மாவட்ட பொருளாளர் உத்திராபதி ஆகியோர் கண்டன உரையாற்றினர். பின்னர் ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தில் இருந்த துணை தாசில்தார் பாஸ்கரிடம் கோரிக்கை தொடர்பான மனுவை அளித்தனர். இதில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட தலைவர் பாலமுருகன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story