சடையார்கோவில் அரசு பள்ளிக்கு ரூ.80 ஆயிரம் சீர்வரிசை பொருட்கள் - கிராம மக்கள் வழங்கினர்


சடையார்கோவில் அரசு பள்ளிக்கு ரூ.80 ஆயிரம் சீர்வரிசை பொருட்கள் - கிராம மக்கள் வழங்கினர்
x
தினத்தந்தி 2 March 2019 4:20 AM IST (Updated: 2 March 2019 4:20 AM IST)
t-max-icont-min-icon

சடையார்கோவில் அரசு பள்ளிக்கு ரூ.80 ஆயிரம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களை கிராம மக்கள் வழங்கினர்.

சாலியமங்கலம்,

தஞ்சை அருகே வாண்டையார் இருப்பை அடுத்த சடையார்கோவிலில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளிக்கு கிராம மக்கள் சார்பில் ரூ.80 ஆயிரம் மதிப்பிலான கல்வி சீர்வரிசை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டார கல்வி அலுவலர் வசந்தி தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை செ.ஜான்தார்க்ரோஸ்லின் ராணி வரவேற்றார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் மா.மங்கை, ஆசிரிய பயிற்றுனர் வி.சுசித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் அ.அப்துல்ரஹீம், பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் கோபு, நாராயணசாமி ஆகியோர் பேசினர். முன்னதாக சீர்வரிசை பொருட்களாக எழுது பொருட்கள், மின்விசிறி, பீரோ, சுவர் கடிகாரம் உள்ளிட்டவற்றை கிராம மக்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.


Next Story