குமரிக்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு


குமரிக்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு
x
தினத்தந்தி 2 March 2019 4:57 AM IST (Updated: 2 March 2019 4:57 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரிக்கு வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கன்னியாகுமரி,

பிரதமர் மோடி ரூ.40 ஆயிரம் கோடி திட்டங்களை குமரியில் நடந்த விழாவில் நேற்று தொடங்கி வைத்தார். இந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பங்கேற்றார். முன்னதாக இந்த விழாவில் பங்கேற்பதற்காக அவர் மதுரையில் இருந்து கார் மூலம் நேற்று மதியம் கன்னியாகுமரிக்கு வந்தார். அங்கு அவருக்கு அ.தி.மு.க. சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தலைமையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொத்து கொடுத்து அ.தி.மு.க. நிர்வாகிகளும், அதிகாரிகளும் வரவேற்றனர். அப்போது குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்கள் எஸ்.ஏ.அசோகன் (குமரி கிழக்கு), ஜான்தங்கம் (குமரி மேற்கு), விஜயகுமார் எம்.பி., முன்னாள் மாவட்ட செயலாளர் சதாசிவம் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் அழகேசன், தோவாளை ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார், குமரி மாவட்ட அ.தி.மு.க. மருத்துவ அணி செயலாளர் டாக்டர் சி.என்.ராஜதுரை, கன்னியாகுமரி நகர செயலாளர் வின்ஸ்டன்ட், கொட்டாரம் நகர செயலாளர் சந்திரசேகரன், மாவட்ட துணை செயலாளர் ராஜன், அவை தலைவர் சேவியர் மனோகரன், ஒன்றிய துணை தலைவர் முத்துசாமி, அகஸ்தீஸ்வரம் பேரூர் செயலாளர் கைலாசம், நாகர்கோவில் நகர செயலாளர் சந்துரு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக காலை 10.30 மணிக்கு விழாவில் பங்கேற்க வந்த கவர்னர் பன்வாரிலால் புரோகித் கன்னியாகுமரிக்கு வந்தார். அவரை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் வரவேற்றார்.

Next Story