ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி முன்னாள் தலைவர் வீடு, அலுவலகங்களில் சோதனை : அமலாக்கத்துறை நடவடிக்கை


ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி முன்னாள் தலைவர் வீடு, அலுவலகங்களில் சோதனை : அமலாக்கத்துறை நடவடிக்கை
x
தினத்தந்தி 2 March 2019 5:42 AM IST (Updated: 2 March 2019 5:42 AM IST)
t-max-icont-min-icon

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் முன்னாள் தலைவராக இருந்தவர் சந்தா கோச்சார். இவர் பதவியில் இருந்தபோது, வீடியோகான் நிறுவனத்துக்கு ரூ.1,875 கோடி முறைகேடாக கடன் வழங்கியதாக கூறப்பட்டது.

மும்பை,

சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சாரின் நிறுவனத்தில் வீடியோகான் நிர்வாகி வேணுகோபால் தூத் இதற்கு கைமாறாக முதலீடு செய்ததாக கூறப்பட்டது. இது தொடர்பாக சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார், வேணுகோபால் தூத் உள்ளிட்டவர்கள் மீது அமலாக்கத்துறையினர் கடந்த மாதம் பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் அமலாக்கத்துறையினர் நேற்று மும்பையில் சந்தா கோச்சார், வேணுகோபால் தூத் ஆகியோரின் வீடு, அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினர். 5 இடங்களில் இந்த சோதனை நடந்தது. மேலும் அவுரங்காபாத் நகரில் உள்ள அலுவலகங்களிலும் சோதனை நடந்தது. இந்த சோதனையின் போது பணமோசடி வழக்கிற்கு தேவையான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் கைப்பற்றியதாக தெரிகிறது.

Next Story