செய்யாறு நகை-அடகுக்கடையில் கணக்கில் வராத ஆவணங்கள் பறிமுதல் வருமான வரித்துறையினர் விடிய விடிய சோதனை


செய்யாறு நகை-அடகுக்கடையில் கணக்கில் வராத ஆவணங்கள் பறிமுதல் வருமான வரித்துறையினர் விடிய விடிய சோதனை
x
தினத்தந்தி 3 March 2019 4:00 AM IST (Updated: 2 March 2019 10:39 PM IST)
t-max-icont-min-icon

செய்யாறு நகை-அடகுக்கடையில் வருமான வரித்துறையினர் 18 மணி நேரமாக விடிய விடிய நடத்திய சோதனையில் கணக்கில் வராத ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

செய்யாறு, 

செய்யாறு காந்தி சாலையில் 3 தலைமுறைகளாக ஒரு நகைக் கடை மற்றும் அடகுக் கடை செயல்பட்டு வருகிறது. மிக அதிக வாடிக்கையாளர்களை கொண்ட இந்த நகைக்கடையில் விற்பனை அதிக அளவில் இருக்கும்.

இந்த நிலையில் அந்த கடைக்கு நேற்று முன்தினம் பிற்பகல் 2 மணியளவில் வருமான வரித்துறையினர், அதிகாரி வி.சுப்பிரமணியன் தலைமையில் 3 வாகனங்களில் வந்தனர். அவர்கள் ஒரே நேரத்தில் அதிரடியாக நகைக் கடை, அடகுக்கடை மற்றும் உரிமையாளர்களின் வீடுகளில் நுழைந்து சோதனை மேற்கொண்டனர்.

பிற்பகலில் தொடங்கிய இந்த சோதனை இரவிலும் நீடித்தது. அவர்கள் கடையில் இருந்த விற்பனை ஆவணங்கள், இருப்பு பதிவேடு என ஒவ்வொன்றினையும் பக்கம், பக்கமாக சரிபார்த்து சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து விடிய, விடிய நடந்த சோதனை நேற்று காலை 8 மணிக்கு நிறைவடைந்தது.

மொத்தம் 18 மணி நேரமாக நடந்த சோதனையில் கணக்கில் வராத ஆவணங்கள் சிலவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றை தாங்கள் வந்த காரில் எடுத்து சென்றனர். இந்த சோதனை மற்ற வியாபாரிகள் மத்தியில் பெரும் கலக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

Next Story