தஞ்சை அருகே ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகள் முட்டி 24 பேர் காயம்
தஞ்சை அருகே நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் அடக்கினர். காளைகள் முட்டியதில் 24 பேர் காயம் அடைந்தனர்.
தஞ்சாவூர்,
தஞ்சையை அடுத்த மாதாக்கோட்டையில் பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு மாதாக்கோட்டை லூர்துமாதா ஆலய தெருவில் நேற்று நடந்தது. ஜல்லிக்கட்டு பேரவையினர் மற்றும் கிராமமக்கள் சார்பில் இந்த ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.
காளைகள் திறந்துவிடப்படும் வாடிவாசலில் இருந்து 100 மீட்டர் தூரம் வரை 1 அடி உயரத்துக்கு தென்னை நார்கள் பரப்பப்பட்டு இருந்தன. அதேபோல் காளைகள், பார்வையாளர் பகுதிக்குள் சென்றுவிடாதபடி தடுக்க இரும்பு கம்பிகள், சவுக்கு கட்டைகளால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன.
ஜல்லிக்கட்டில் பங்கேற்க தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, கரூர், சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காளைகள் அதிகாலை முதலே சரக்கு வேன் மூலம் அழைத்து வரப்பட்டன. மாடுபிடி வீரர்களும் அதிகாலை முதலே வரத் தொடங்கினர்.
மாடுபிடி வீரர்களுக்கு டாக்டர்கள் மற்றும் செவிலியர் அடங்கிய குழுவினர் பரிசோதனை செய்தனர். காளைகளை அடக்க வந்திருந்த வீரர்கள் மது அருந்தி உள்ளார்களா? அல்லது புகையிலை பொருட்கள் வைத்திருக்கிறார்களா? என்று பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் உயரம், எடை, ரத்தஅழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. உடற்தகுதி இல்லாத வீரர்கள் மாடுபிடிக்க அனுமதிக்கப்படவில்லை. மாடுபிடிக்க தகுதியான வீரர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
காளைகளுக்கு கால்நடை டாக்டர்கள் குழுவினர் பரிசோதனை செய்தனர். ஜல்லிக்கட்டு காலை 7.50 மணிக்கு தொடங்கியது. முதலில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்று கொண்டனர். பின்னர் ஜல்லிக்கட்டை கலெக்டர் அண்ணாதுரை, பரசுராமன் எம்.பி. ஆகியோர் கொடிஅசைத்து தொடங்கி வைத்தனர். ஒவ்வொரு காளையாக வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டன. அவைகள் களத்தில் சீறிப்பாய்ந்தன. ஒன்றுக்கு மேற்பட்ட வீரர்கள் காளையை பிடித்தபோது காளை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஒரு காளையை ஒரு வீரர் மட்டுமே பிடித்தால் வீரர் பிடித்ததாக அறிவிக்கப்பட்டு பரிசு பொருட்கள் உடனுக்குடன் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற காளைகளுக்கு வழங்கப்பட்ட பரிசு பொருட்கள் அதன் உரிமையாளர்கள் பெற்று கொண்டனர். காளைகளை வீரர்கள் பிடித்தபோது பார்வையாளர்கள் கரவொலி எழுப்பி உற்சாகப்படுத்தினர். பார்வையாளர்கள் வீட்டு மாடிகளில் ஏறி நின்று ஜல்லிக்கட்டை பார்த்து மகிழ்ந்தனர். வெயில் கொளுத்தியதால் பார்வையாளர்களுக்கு வசதியாக வீட்டு மாடிகளில் பந்தல் போடப்பட்டு இருந்தது.
சில காளைகள் வீரர்களை நோக்கி சீறி பாய்ந்து சென்றபோது சிலர் தரையில் படுத்து கொண்டனர். பலர் தங்களை காத்து கொள்ள தடுப்பு கம்பிகள் மீது ஏறி கொண்டனர். ஜல்லிக்கட்டு மாலை 4.15 மணி வரை நடைபெற்றது. மொத்தம் 700 காளைகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. இவற்றில் 652 காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டன. 310 வீரர்கள் பங்கேற்றனர். காளைகள் முட்டியதில் 24 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு உடனே முதலுதவி அளிக்கப்பட்டது. இவர்களில் 20 பேர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Tags :
Next Story