பாண்லே மூலம் பால் பொருட்கள் தயாரிக்க ரூ.54 கோடியில் புதிய நவீன தானியங்கி எந்திரங்கள் வாங்கப்படும் சட்டசபையில் தகவல்


பாண்லே மூலம் பால் பொருட்கள் தயாரிக்க ரூ.54 கோடியில் புதிய நவீன தானியங்கி எந்திரங்கள் வாங்கப்படும் சட்டசபையில் தகவல்
x
தினத்தந்தி 3 March 2019 4:45 AM IST (Updated: 3 March 2019 1:41 AM IST)
t-max-icont-min-icon

பாண்லே மூலம் ஐஸ் கிரீம் உள்ளிட்ட பால் பொருட்கள் தயாரிக்க ரூ.54 கோடியில் புதிதாக நவீன எந்திரங்கள் வாங்கப்படும் என்று சட்ட சபையில் தெரிவிக்கப்பட்டது.

புதுச்சேரி,

காங்கிரஸ் மற்றும் தி.மு.க. கூட்டணி ஆட்சியில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து புதுச்சேரி முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. உலக வங்கி மற்றும் நிதி ஆயோக் நிறுவனம் சேர்ந்து நடத்திய ஆய்வில் தொழில் தொடங்குவதற்கான சாத்தியக்கூறு உள்ள மாநிலமாக இந்திய அளவில் 5-வது இடத்தை பெற்றுள்ளது.

விவசாயிகளுக்கு பல மானிய திட்டங்களை குறிப்பாக நெல் பயிரிடுவோருக்கு ஒரு போகத்துக்கு ஹெக்டேருக்கு ரூ.5 ஆயிரம் மானியமாக அரசு வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக விவசாயிகளின் நலன்சார்ந்த திட்டங்களை மறுசீரமைப்பு செய்து நில உரிமையாளர்கள் மற்றும் குத்தகைதாரர்கள் உள்ளிட்ட உழவர்களுக்கான மானியத்தை நேரிடையாக வழங்கும் வகையில் உழவர் உதயம் திட்டம் 2019-20 நிதி ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி பால் உற்பத்தியில் தன்னிறைவு பெறும் நோக்கில் பல புதிய திட்டங்கள் 2019-20ல் செயல் படுத்தப்படும். குறிப்பாக பாண்லேயின் தற்போதைய கட்டமைப்பு ரூ.34 கோடி மதிப்பீட்டில் நவீனப்படுத்தப்பட உள்ளது. மேலும் தேசிய பால்பண்ணை அபிவிருத்தி திட்டத்தின்கீழ் ஐஸ்கிரீம் உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட பல விதமான பால் பொருட்களை பாண்லே மூலம் தயாரித்திட ரூ.54 கோடி மதிப்பில் புதிய நவீன தானியங்கி எந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மகளிர் மற்றும் விவசாயிகளுக்கு கறவை மாடுகள் வாங்கவும், பால் பொருட்கள் மற்றும் பால் பதனீடு போன்றவற்றில் பயிற்சி அளித்து வருமானத்தை உயர்த்துவதற்கான ரூ.12 கோடியில் திட்டம் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story