20 பேருக்கு தமிழ்மாமணி விருது நாராயணசாமி வழங்கினார்


20 பேருக்கு தமிழ்மாமணி விருது நாராயணசாமி வழங்கினார்
x
தினத்தந்தி 3 March 2019 4:15 AM IST (Updated: 3 March 2019 1:41 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் தமிழ் மாமணி விருதினை 20 பேருக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி வழங்கி கவுரவித்தார்.

புதுச்சேரி,

புதுச்சேரி அரசு கலை, பண்பாட்டுத்துறை சார்பில் 2010 முதல் 2014-ம் ஆண்டு வரை தமிழ்மாமணி மற்றும் தெலுங்கு ரத்னா விருதுக்கு தேர்வு பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பணமுடிப்பு வழங்கும் விழா சட்டசபை வளாகத்தில் நடந்தது.

விழாவுக்கு கலை, பண்பாட்டுத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 20 பேருக்கு தமிழ்மாமணி விருதினையும், ஒருவருக்கு தெலுங்கு ரத்னா விருதினையும் முதல்-அமைச்சர் நாராயணசாமி வழங்கினார். இதற்கான தொகை தலா ரூ.75 ஆயிரம் வீதம் விருது பெற்றவர்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டது.

இதில் ராசவேங்கடேசன், அரங்கநடராசன், கிருஷ்ணசாமி, பட்டாபிராமன், பசுபதி, வேல்முருகன், இலக்கியன் என்கிற லட்சுமி நாராயணன், கல்லாடன், தமிழமல்லன், பூங்கொடிபராங்குசம், தமிழியக்கன், சாயபுமரைக்காயர், அரிமளம் பத்மநாபன், நாராயணன், செல்வராசு, உசேன், ராகவசாமி, பாண்டுரங்கன், ரத்தின ஜனார்த்தனன், மணிமேகலை குப்புசாமி ஆகியோருக்கு தமிழ்மாமணி விருதும், விஜயலட்சுமி காமவரப்புக்கு தெலுங்கு ரத்னா விருதும் வழங்கப்பட்டது.

விழாவில் துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், எம்.என்.ஆர்.பாலன் மற்றும் கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் கணேசன் உள்பட அதிகாரிகள் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Next Story