திருக்கயிலாயம்- மானசரோவர் தத்ரூப தரிசனம் தொடக்கம் வள்ளுவர் கோட்டத்தில் 5-ந்தேதி வரை நடக்கிறது
மகாசிவராத்திரியை முன்னிட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பிரம்மா குமாரிகள் இயக்கம் சார்பில் திருக்கயிலாயம்- மானசரோவர் தத்ரூப தரிசனம் நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. வரும் 5-ந்தேதி வரை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுகிறார்கள்.
சென்னை,
பிரம்மா குமாரிகள் இயக்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரியை, சிவஜெயந்தி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில், 83-ம் ஆண்டு மகாசிவராத்திரி திருமூர்த்தி சிவஜெயந்தி விழாவையொட்டி திருக்கயிலாயம்- மானசரோவர் தத்ரூப தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான தொடக்க விழா நேற்று நடந்தது.
விழாவில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி அனிதா சுமந்த் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். விழாவில் வருமானவரித்துறை ஆணையர் முரளிகுமார், முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா, ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரகுமார், டீன் டாக்டர் நாராயணபாபு, மருத்துவ கழக தலைவர் டாக்டர் சந்திரசேகர், பிரம்மா குமாரி அமைப்பின் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி பகுதி சேவை ஒருங்கிணைப்பாளர் பீனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பொதுமக்கள் திருக்கயிலாயம்- மானசரோவர் தத்ரூப காட்சியை தரிசனம் செய்தனர்.
பொதுமக்களுக்கு தியானம், ராஜயோக படவிளக்கம், மாணவர்களுக்காக பண்பு நிறைந்த வாழ்க்கைக் கல்வி முறை, ஆன்மிகம்- அறிவியல் விளக்கம், போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
சிவராத்திரியை முன்னிட்டு நாளை( திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு பெண்கள் கலந்து கொள்ளும் விளக்கு தியானம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
வரும் 5-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வரை தினசரி காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்களும், பக்தர்களும் திருக்கயிலாயம் தத்ரூப தரிசனத்தை இலவசமாக தரிசிக்கலாம். தினசரி மாலை 6 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.

Related Tags :
Next Story