மசினகுடி அருகே கோவிலுக்குள் உலா வந்த காட்டுயானை
மசினகுடி அருகே கோவிலுக்குள் காட்டுயானை உலா வந்தது.
மசினகுடி,
மசினகுடி அருகே பொக்காபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து, அம்மனை தரிசித்து செல்கின்றனர்.
இந்த கோவிலில் தேர்த்திருவிழா வருகிற 8-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பொக்காபுரம் பகுதிக்குள் காட்டுயானை ஒன்று புகுந்தது. பின்னர் அந்த யானை மாரியம்மன் கோவிலுக்குள் சென்றது. அங்கு உணவு, தண்ணீர் கிடைக்குமா? என்று தேடியபடி உலா வந்தது. நீண்ட நேரம் கோவிலுக்குள் உலா வந்த அந்த காட்டுயானை, அதன்பிறகு வெளியே வந்தது. கோவிலின் முன்பகுதியில் தோரணத்துக்கு கட்டப்பட்டு இருந்த வாழைகளை தின்ற காட்டுயானை சிறிது நேரம் கழித்து வனப்பகுதிக்கு திரும்பி சென்றது. கோவிலுக்குள் உலா வந்த காட்டுயானையை அப்பகுதி மக்கள் தங்கள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர். அந்த காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகின்றன.
Related Tags :
Next Story