கடலூரில் பரபரப்பு டாக்டர் வீடு, மருத்துவமனையில் வருமானவரித்துறையினர் சோதனை


கடலூரில் பரபரப்பு டாக்டர் வீடு, மருத்துவமனையில் வருமானவரித்துறையினர் சோதனை
x
தினத்தந்தி 3 March 2019 3:15 AM IST (Updated: 3 March 2019 3:22 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் டாக்டர் வீடு மற்றும் அவரது மருத்துவமனையில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினார்கள்.

கடலூர்,

கடலூர் செம்மண்டலம் தவ்லத் நகரில் வசிப்பவர் டாக்டர் சிவசுப்பிரமணியன். இவர் கடலூர் அரசு மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். மேலும் மஞ்சக்குப்பம் பாஷ்யம் தெருவிலும் தனியாக மருத்துவமனை நடத்தி வருவதாக தெரிகிறது.

இந்த நிலையில் இவரது வீடு மற்றும் மருத்துவமனையில் கடந்த 2 நாட்களாக வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினார்கள். புதுச்சேரி வருமானவரித்துறை இணைஆணையர் சிவகுமார் தலைமையில் 16 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் இச்சோதனையில் ஈடுபட்டனர்.

நேற்று முன்தினம் அவரது வீட்டிலும் நேற்று அவரது மருத்துவமனையிலும் சோதனை நடந்தது. இதனால் அவரது மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளை மருத்துவமனை ஊழியர்கள் திருப்பி அனுப்பினார்கள்.

இந்த சோதனை நேற்று இரவு 8 மணிக்கு மேலும் நீடித்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இந்த சோதனையில் என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்ற விவரங்களை வருமானவரித்துறையினர் தெரிவிக்கவில்லை.

Next Story