நாங்குநேரி அருகே டாஸ்மாக் பார் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை


நாங்குநேரி அருகே டாஸ்மாக் பார் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 3 March 2019 3:46 AM IST (Updated: 3 March 2019 3:46 AM IST)
t-max-icont-min-icon

நாங்குநேரி அருகே டாஸ்மாக் பார் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் அவரது தம்பி புகார் தெரிவித்துள்ளார்.

நாங்குநேரி,

நாங்குநேரி அருகே உள்ள குசவன்குளத்தை சேர்ந்தவர் சுதாகர் (வயது 40). இவர் டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி பானுமதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த சுதாகர், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து நாங்குநேரி போலீசில், சுதாகரின் தம்பி சவுந்தர் புகார் செய்தார். அதில், தன்னுடைய அண்ணன் சுதாகர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story