மாவட்ட கல்வி அதிகாரி பணிக்கான தேர்வு - 1,526 பேர் எழுதினர்


மாவட்ட கல்வி அதிகாரி பணிக்கான தேர்வு - 1,526 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 3 March 2019 4:05 AM IST (Updated: 3 March 2019 4:05 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் மாவட்ட கல்வி அதிகாரி பணிக்கான எழுத்துத்தேர்வு 6 மையங்களில் நேற்று நடந்தது. இதில் 1,526 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.

நெல்லை,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் மாவட்ட கல்வி அதிகாரி பணிக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது. நெல்லையில் கிறிஸ்துராஜா, ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளிகள், ரோஸ்மேரி, ஜோஸ் மெட்ரிக் பள்ளிகள், அரசு என்ஜினீயரிங் கல்லூரி, சீதபற்பநல்லூர் ஐன்ஸ்டின் கலைக்கல்லூரி ஆகிய 6 மையங்களில் தேர்வு நடந்தது.

நெல்லை மையங்களில் தேர்வு எழுதுவதற்கு 2 ஆயிரத்து 129 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இதில் 1,526 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 603 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்த தேர்வு முழுவதும் வீடியோ கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது. மேலும் சிறப்பு குழு அலுவலர்களும் கண்காணித்தனர்.

இதேபோல் தொழில்துறை உதவி என்ஜினீயர் பதவிக்கான எழுத்து தேர்வு நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை மேக்தலின் மெட்ரிக் பள்ளியில் நேற்று காலையிலும், மாலையிலும் நடந்தது. இதில் 287 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 196 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்த தேர்வை அதிகாரிகள் கண்காணித்தனர்.


Next Story