செங்கோட்டை, தென்காசி வழியாக புதிய தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் - நாளை முதல் இயக்கப்படுகிறது
செங்கோட்டை, தென்காசி வழியாக புதிய தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை முதல் இயக்கப்படுகிறது.
நெல்லை,
சென்னை -கொல்லம் இடையே செங்கோட்டை, தென்காசி வழியாக புதிய தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை முதல் இயக்கப்படுகிறது. இதற்கான தொடக்க விழா நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.
செங்கோட்டை -புனலூர் அகல ரெயில் பாதை பணிகள் முடிவடைந்த பிறகு, அந்த பாதையில் தாம்பரம் -கொல்லம் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சென்னை எழும்பூரில் இருந்து கொல்லத்துக்கு புதிய தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது.
இதற்கான தொடக்க விழா சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நாளை (திங்கட் கிழமை) மாலை நடைபெறுகிறது.
இதை தொடர்ந்து இந்த ரெயில் (வண்டி எண் 16101) தினமும் சென்னை எழும்பூரில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படுகிறது. தென்காசிக்கு மறுநாள் காலை 4.13 மணிக்கும், செங்கோட்டைக்கு காலை 5.10 மணிக்கும் வந்து, கொல்லத்தை காலை 8.45 மணிக்கு சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில் கொல்லத்தில் இருந்து இந்த ரெயில் (வண்டி எண் 16102) காலை 11.45 மணிக்கு புறப்படுகிறது. செங்கோட்டைக்கு மாலை 3.10 மணிக்கும், தென்காசிக்கு 3.28 மணிக்கும் வந்து செல்கிறது. இந்த ரெயில் சென்னை எழும்பூரை மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு சென்றடைகிறது.
இந்த ரெயிலில் மூன்றடுக்கு ஏ.சி. வசதி பெட்டிகள் 2, இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள் 8, 2 பொது பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும்.
இந்த தகவலை மதுரை ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ளது.

Related Tags :
Next Story