கூடுதல் தண்ணீர் திறப்பு: பாபநாசம் அணை நீர்மட்டம் 54.70 அடியாக சரிவு
கூடுதலாக தண்ணீர் திறக்கப்படுவதால் பாபநாசம் அணை நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. கோடைகால குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
நெல்லை,
பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்படுவதால் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. கோடைகால குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் பிரதான அணையாக பாபநாசம் அணை விளங்குகிறது. 143 அடி உயரம் கொண்ட இந்த அணையின் மொத்த கொள்ளளவு 5,500 மில்லியன் கன அடி ஆகும். இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதியில் நெல் விளைந்து அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனாலும் அணையில் இருந்து வழக்கம் போல் கூடுதலாகவே தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் அணை நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 54.70 அடியாக சரிந்தது. இந்த அணையில் தற்போது 5-ல் ஒரு மடங்கு தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. அதாவது 1,023 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. இந்த அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று இது 700 கன அடியாக குறைக்கப்பட்டு உள்ளது. 156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 63 அடியாக குறைந்துள்ளது.
இவ்வாறு கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் பல்வேறு கால்வாய்களிலும் தண்ணீர் நிரம்பியவாறு செல்கிறது. நெல்லை டவுன் நயினார் குளம் நேற்றும் நிரம்பி மறுகால் பாய்ந்தது. இதைக்கண்ட விவசாயிகள் தேவையில்லாத நேரத்தில் கூடுதலாக தண்ணீரை திறந்து வீணடிக்கிறார்கள். தேவையான அளவு மட்டுமே தண்ணீர் திறந்து, கோடை காலத்தை கருத்தில் கொண்டு தண்ணீரை இருப்பு வைக்க வேண்டும். நடப்பு ஆண்டில் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வறட்சி நிலவுவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். எனவே பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் தண்ணீரை இருப்பு வைத்து மக்களின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 84.25 அடியாக உள்ளது. இந்த அணையில் 2,500 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. கோடை காலத்தில் இந்த அணியில் இருந்து தாமிரபரணியில் தண்ணீர் திறக்கப்பட்டு குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும். கடந்த ஆண்டும் இந்த நடைமுறை இருந்தது” என்றனர்.
இதற்கிடையே நேற்று முன்தினம் நெல்லை மாவட்டத்தில் திடீர் கோடை மழையும் பெய்துள்ளது. சேர்வலாறு 6 மில்லி மீட்டர், பாபநாசம் 1 மில்லி மீட்டர், சிவகிரியில் 2 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

Related Tags :
Next Story