பெண்களுக்கான ‘செல்போன்’ ஆய்வு
மொபைல் தொடர்பு சேவைக்கான உலகளாவிய அமைப்பு சார்பில் சமீபத்தில் நடத்தப்பட்ட புள்ளிவிவரப்படி, ஆண்களை காட்டிலும் 28 சதவீதம் குறைவாகவே பெண்கள் சொந்தமாக செல்போன் வைத்திருக்கிறார்கள்.
மொபைல் தொடர்பு சேவைக்கான உலகளாவிய அமைப்பு சார்பில் சமீபத்தில் நடத்தப்பட்ட புள்ளிவிவரப்படி, ஆண்களை காட்டிலும் 28 சதவீதம் குறைவாகவே பெண்கள் சொந்தமாக செல்போன் வைத்திருக்கிறார்கள். அதுபோல் செல்போன் மூலம் இணைய தளத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை அறியாத பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இணையதளத்தை பயன்படுத்தும் ஆண்களை காட்டிலும் பெண்களின் எண்ணிக்கை 56 சத வீதம் அளவுக்கு குறைவாகத்தான் இருக்கிறது. செல்போனில் இணையதள வசதி இருப்பது பற்றியும், அதனை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம், எப்படி பயன் படுத்த வேண்டும் என்பது பற்றி 42 சதவீத பெண்களுக்குத்தான் தெரிகிறது. இந்த விழிப்புணர்வு 2017-ம் ஆண்டு 17 சதவீதம் என்ற அளவிலேயே இருந்திருக்கிறது. தற்போது அவசிய தேவைகளுக்கு எப்படியெல்லாம் செல்போன்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது பற்றிய விழிப்புணர்வு பெண்களிடம் அதி கரித்து வருகிறது.
இதுபற்றி மொபைல் தொடர்பு சேவைக்கான உலகளாவிய அமைப்பின் நிர்வாகி மாட்ஸ் கிரான்ரிட், ‘‘உலகம் முழுவதும் மூலை முடுக்கெல்லாம் மொபைல் இணைப்புகள் விரைவாக பரவி விட்டன. ஆனாலும் மொபைல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் ஆண் - பெண் இடையே சமநிலையற்ற தன்மையே நிலவுகிறது. ஏற்கனவே பாலின சமத்துவம் பெண்களுக்கு எதிராகவே அமைந்திருக்கிறது. தற்போது இணைய உலகமும் அவர்களை பின்னோக்கி தள்ளிக்கொண்டிருக்கிறது’’ என்கிறார்.
Related Tags :
Next Story