போரூர் அருகே பெண் மர்ம சாவு; போலீசில் அண்ணன் புகார்
போரூர் அருகே, பெண் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் அவரது அண்ணன் புகார் செய்து உள்ளார்.
பூந்தமல்லி,
சென்னை போரூரை அடுத்த முகலிவாக்கத்தை சேர்ந்தவர் சரவணன்(வயது 44). இவருடைய மனைவி கலைவாணி(38). இவர்களுக்கு கிருத்திகா(12), ஜீவா (10) என 2 மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்ற கலைவாணிக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது.
உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், கலைவாணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த கலைவாணியின் அண்ணன் முருகதாஸ்(46) அதிர்ச்சி அடைந்தார். தனது தங்கையின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவர் மாங்காடு போலீசில் புகார் செய்தார்.
அதில், “எனது தங்கைக்கு திருமணத்தின்போது அதிக அளவில் நகைகள் போடப்பட்டது. திருமணம் ஆன நாள் முதல் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இருவரையும் நாங்கள் சமாதானம் செய்து வைத்தோம். கடந்த சில வாரங்களுக்கு முன்பு வீட்டில் கீழே விழுந்ததில் கலைவாணிக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதற்கு முறையான சிகிச்சை அளிக்காமல் இருந்த நிலையில் தற்போது கலைவாணி உடல் நிலை பாதிக்கப்பட்டு இறந்ததாக கூறுவது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த மர்ம சாவு குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறி இருந்தார்.
அந்த புகாரின்பேரில் மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கலைவாணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story