ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. சார்பில் 94 ஜோடிகளுக்கு திருமணம் - ஓ.பன்னீர்செல்வம் நடத்தி வைத்தார்
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி தேனி மாவட்ட அ.தி.மு.க சார்பில் 71 சீர்வரிசைகளுடன் 94 ஜோடிகளின் திருமணத்தை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நடத்தி வைத்தார்.
பெரியகுளம்,
தேனி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அ.தி.மு.க சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த 94 ஜோடிகளுக்கு 71 சீர்வரிசை பொருட்களுடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விழா பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் வி.எல்.கே மண்டபத்தில் நடைபெற்றது. அ.தி.மு.க மாவட்ட செயலாளர் சையதுகான் வரவேற்று பேசினார்.
விழாவிற்கு தமிழக துணை முதல்-அமைச்சரும், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினர். விழாவில் 94 ஜோடிகளையும் ஒரே மேடையில் தனித்தனியாக அமர்த்தி வேத புரோகிதர்கள் மந்திரங்கள் ஓத திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்த திருமணங்களை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நடத்தி வைத்து மணமக்களுக்கு 71 வகையான சீர்வரிசை பொருட் களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா இதுபோன்று பல்லாயிரக்கணக்கான ஜோடிகளின் திருமணங்களை, கழகத்தின் சார்பிலும், அரசின் சார்பிலும் நடத்தி வாழ்க்கைக்கு தேவையான பல்வேறு வகையான சீர்வரிசைகளை அந்த மணமக்களுக்கு அள்ளி வழங்கி சாதனை படைத்திருக் கிறார் என்பதை பெருமையுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
தங்களது வாழ்க்கையில் வசந்தம் வீசாதா என்று ஏங்கி தவித்த ஏழை பெண்களின் திருமணத்திற்கு மகளிர் திருமண உதவித்திட்டத்தை கொண்டு வந்து தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கினார். மேலும் நிதி உதவி திட்டத்தையும் செயல்படுத்தினார். ஜெயலலிதாவின் வழிகாட்டுதலில் செயல்படும் அ.தி.மு.க. அரசும், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை இன்று வரை தொய்வின்றி நடத்தி ஏழைப்பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி வருகிறது. கடந்த 8 ஆண்டுகளில் அதாவது 18.2.2019 வரை 11 லட்சத்து 2 ஆயிரத்து 392 பயனாளிகளுக்கு ரூ.1,424 கோடியே 92 லட்சம் மதிப்பிலான 5 ஆயிரத்து 223 கிலோ தங்கமும், 3 ஆயிரத்து 982 கோடியே 39 லட்சம் நிதி உதவியும் வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.
கடந்த 8 ஆண்டுகளாக நல்லாட்சி நடைபெற்று வருகின்ற தமிழகத்தில் அமைதி பூத்து குலுங்குகிறது. எவ்விதமான மின்வெட்டும் இல்லாமல் ஒளிமயமாக திகழ்கிறது. சட்டம், ஒழுங்கு அமைதியை பேணி பாதுகாக்கின்ற மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாடு அதிகமான உணவு தானிய உற்பத்தி செய்துள்ளது என்று மத்திய அரசு விருது வழங்கியுள்ளது. தமிழகத்தில் மக்கள் மனமகிழ்ச்சியுடன் அனைத்து விதமான வசதிகளுடனும், தேவைகளுடனும் நிம்மதி பெருமூச்சுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வெளிநாட்டவரும், வெளி மாநிலத்தவரும் விரும்பி வரும் மாநிலம் தமிழ்நாடு தான். ஆதலால் தான் தமிழகம் சொர்க்க பூமியாக தெரிகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில் பார்த்திபன் எம்.பி., ஜக்கையன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.வும், தேனி ஒன்றிய செயலாளருமான ஆர்.டி.கணேசன், அ.தி. மு.க முன்னாள் மாவட்ட செயலாளர் டி.டி.இ. சிவக் குமார், அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் ஆர்.முருகேசன், பழனிசெட்டிபட்டி பேரூர் செயலாளர் தீபன்சக்கரவர்த்தி, பெரியகுளம் ஒன்றிய செயலாளர் வீ.அன்னப்பிரகாஷ், பெரிய குளம் நகர துணை செயலாளர் எம்.அப்துல்சமது, போடி ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.சற்குணம், பெரியகுளம் நகர 18-வது வார்டு பிரதிநிதி ஓ.சண்முகசுந்தரம், இளைஞர் பாசறை நிர்வாகி வி.ப.ஜெய பிரதீப், சின்னமனூர் நகர செயலாளர் ராஜேந்திரன், கம்பம் நகர செயலாளர் ஜெகதீஷ், சின்னமனூர் ஒன்றிய செயலாளர் விமலேஸ்வரன், மாவட்ட துணை செயலாளர் முருக்கோடை ராமர், வக்கீல் பிரிவு மாவட்ட செயலாளர் டி.கே.ஆர்.கணேசன், ஆண்டிப்பட்டி ஒன்றிய செயலாளர் லோகிராஜன், கடமலை மயிலை ஒன்றிய செயலாளர் கொத்தாளமுத்து, மாவட்ட பிரதிநிதி கவிராஜன் மற்றும் கட்சி பிரமுகர்கள், மணமக் களின் உறவினர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் மதிய விருந்து வழங்கப்பட்டது.
விழாவினை முன்னிட்டு லட்சுமிபுரம் பகுதி விழாக் கோலம் பூண்டிருந்தது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முடிவில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஓ.ப. ரவீந்திரநாத்குமார் நன்றி தெரிவித்து பேசினார்.
Related Tags :
Next Story