திருவெண்ணெய்நல்லூர் அருகே, மீன் ஏற்றி வந்த மினிலாரி, வாய்க்காலில் கவிழ்ந்தது
திருவெண்ணெய்நல்லூர் அருகே மீன் ஏற்றி வந்த மினிலாரி வாய்க்காலில் கவிழ்ந்து 9 பேர் காயமடைந்தனர்.
அரசூர்,
விழுப்புரத்தில் இருந்து திருவெண்ணெய்நல்லூருக்கு நேற்று காலை மீன் ஏற்றிக்கொண்டு மினிலாரி ஒன்று வந்தது. திருவெண்ணெய்நல்லூர் அருகே ஏனாதிமங்கலம் ரெட்டிவாய்க்கால் என்கிற இடத்தில் வந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினிலாரி, சாலையோர வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில் ஆமூர்குப்பம் கிராமத்தை சேர்ந்த டிரைவர் ரமேஷ்(வயது 37), அவருடன் வந்த அதேபகுதியை சேர்ந்த சி.ஏழுமலை(35), கேசவன்(44), கே.ஏழுமலை(38), தேவராஜ்(27), சிறுமதுரையை சேர்ந்த ஜெயராமன் மனைவி குப்பு(50), லட்சாதிபதி மனைவி மகாலட்சுமி(45), தர்மர் மனைவி பவானி(45), வடிவேல் மனைவி மங்கலம்(37) ஆகியோர் காயமடைந்த னர். மேலும் மினிலாரியில் இருந்த மீன்கள் அனைத்தும் வாய்க்காலில் கொட்டியது.
விபத்தை பார்த்த, அந்த பகுதி மக்கள் ஓடோடி வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story