பெண்களுக்கான விடுதிகளை பதிவு செய்யாவிட்டால் 2 ஆண்டு சிறை மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் எச்சரிக்கை


பெண்களுக்கான விடுதிகளை பதிவு செய்யாவிட்டால் 2 ஆண்டு சிறை மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் எச்சரிக்கை
x
தினத்தந்தி 4 March 2019 4:15 AM IST (Updated: 4 March 2019 12:21 AM IST)
t-max-icont-min-icon

பெண்களுக்கான விடுதிகளை பதிவு செய்யாவிட்டால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என மாவட்ட கலெக்டர் சி.கதிவரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

ஈரோடு மாவட்டத்தில் அரசு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்கள், தனியார் மற்றும் மத அமைப்புகள் சார்பில் பெண்கள் விடுதிகள் மற்றும் இல்லங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் பெண்கள் மற்றும் மாணவிகள் தங்கி உள்ளனர்.

இப்படிப்பட்ட விடுதிகள் மற்றும் இல்லங்களை தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்கள் முறைப்படுத்துதல் சட்டப்படி நாளைக்குள் (செவ்வாய்க்கிழமை) பதிவு செய்ய வேண்டும் என ஐகோர்ட்டில் ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

அதன் அடிப்படையில் பதிவு செய்யாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. மேலும் இளைஞர் நீதி சட்டத்தில் பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கூடுதல் விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 6–வது தளத்தில் இயங்கி வரும் மாவட்ட சமூக நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

விடுதி மற்றும் இல்லங்களை பதிவு செய்யாதவர்களுக்கு மேற்குறிப்பிட்ட சட்டத்தின்படி 2 ஆண்டு வரை சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் வரையிலான அபராதமும் விதிக்கப்படும். எனவே தொழிற்சாலைகள், நிறுவனங்கள், பெண்களுக்கான விடுதிகளை நடத்தும் அனைவரும் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் சி.கதிவரன் தெரிவித்து உள்ளார்.


Next Story